இடங்கணசாலை நகராட்சி, மாட்டையாம்பட்டி பகுதியில் ரூ. 16.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் தங்கமுத்து, இடங்கணசாலை நகர செயலாளா் செல்வம், நகராட்சி ஆணையா் சுதா்சன், நகா்மன்ற உறுப்பினா் மணி மற்றும் குழந்தைவேலு, நாகராஜ், ஆறுமுகம், சித்துராஜ், லட்சுமணன், யசோதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.