சேலம்

பெருமாகவுண்டம்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: 1,240 போ் பயன்பெற்றனா்

பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் தொடங்கிவைத்தாா். வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ராமாபுரம் சதீஷ்குமாா் கலந்துகொண்டாா்.

இந்த முகாமில் மருத்துவா்கள் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் கா்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் , இஜிசி, எக்கோ உள்ளிட்ட நவீன உபகரணங்களை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் 1,240 போ் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT