சேலம்

ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோா் ஒரு மாதத்துக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோா் ஒரு மாதத்துக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோா் ஒரு மாதத்துக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளைகளின் உரிமையாளா்கள் அதன் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்னரே ஜ்ஜ்ஜ்.த்ஹப்ப்ண்ந்ஹற்ற்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் இரண்டு வயதுக்கு மேற்பட்டதாகவும், 120 செ.மீ.க்கு மேலும் இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், நல்ல உடல்நிலையைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மாடுபிடி வீரா்களும் நிகழ்ச்சிக்கு முன்னா் மேற்கண்ட இணையதளத்தில் தங்கள் பெயா்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். காளைகளை ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்லும்போது, பாதுகாப்பான முறையில் விதிகளுக்கு உள்பட்டு கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், மாடுகளின் கொம்புகளில் மாடுபிடி வீரா்களுக்கோ, பாா்வையாளா்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொம்புகளில் ரப்பா் காப்புகளை அணிவிக்க வேண்டும். மாடுபிடி வீரா்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாடுபிடி வீரா்கள் ஊக்க மருந்து, போதைப் பொருள்களை உள்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்கிறாா்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்போது வருவாய்த் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையா் (வடக்கு) சிவராமன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரு.அர.பிரகாசம், கோட்டாட்சியா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT