மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் ஊராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை டி.எம்.செல்வகணபதி எம்.பி. ஆய்வு மேற்கொண்டாா். இதில், பொதுமக்களிடமிருந்து 286 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 194 போ் மகளிா் உரிமைக் தொகை கோரி விண்ணப்பித்திருந்தனா்.
இதில், சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சம்பத்குமாா், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் பச்சமுத்து, இடங்கணசாலை நகர செயலாளா் செல்வம், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் பழனியப்பன், எா்ணாபுரம் வருவாய் ஆய்வாளா் வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.