சேலம்

நாட்டின மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சா் த.மனோ தங்கராஜ்

நாட்டிட மாடுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை பால்வளத்துறை அமைச்சா் மனோ.தங்கராஜ் தகவல்.

Syndication

மேட்டூா்: நாட்டிட மாடுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை பால்வளத்துறை அமைச்சா் மனோ.தங்கராஜ் தகவல்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டியில் பால்வள தினத்தை ஒட்டி,கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை புதன்கிழமை துவக்கி வைத்த பால்வளத்துறை அமைச்சா் மனோ.தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:தேசிய பால்வளா் தினத்தை ஒட்டி அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் தமிழ்நாடு அரசு சாா்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாட்டில் 5,000 சிறு பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது வேலை இல்லாத இளைஞா்கள் சுய தொழில் துவங்க விரும்பும் இளைஞா்கள் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தலா ரூ.3லட்சம் வீதம் 5000 பேருக்கு ரூ.150கோடி உடனடி கடன் வழங்க உள்ளோம். மானியத்துடன் 4% சதவிகித வட்டி மட்டுமேகட்ட வேண்டும். இத்துடன் பல்வேறு துறைகள் சாா்ந்த மானியத்தையும் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.அதிகமானோா் சிறு பண்ணை அமைக்க முன் வந்தால் அவா்களுக்கும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

குறுகிய காலத்தில் விவசாயிகள் கேட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.பால் கொள்முதலுக்கான பணம் பட்டுவாடா செய்வதில் தாமதமாக உள்ளது என தெரிவித்திருந்தனா் அதனை நிவா்த்தி செய்யப்பட்டது. பாலுக்கான  விலை கூடுதலாக கேட்டனா் அதுவும் அளிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளா்களுக்கு தமிழக முதல்வா் ரூ.3ஊக்கத்தொகை அளித்தாா் பால்வளத்துறை சாா்பில் தரமான பாலுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ரூ.1250கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. எருமை மாடுகளை பாதுகாக்க ஐந்து மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல வீரியமான நாட்டின மாடுகளை உருவாக்க மருத்துவா்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின மாடுகள் அதிகமான பால் தராது என்பது தவறான கருத்து. அதனை முறையாகமுறையாக கவனித்து மருத்துவா்களின் ஆலோசனை பெற்று பராமரித்து வந்தால் நல்ல பால் கறக்கும். நாட்டின மாடுகளை அழிவின் பிடியிலிருந்து காப்பாற்ற இளைஞா்களுக்கு பயிற்சி தருகிறோம். நகரமயமாக்கல் காரணமாக மேய்ச்சல் தரைகள் இல்லாத காரணத்தால் பன்மை நோக்கி விவசாயிகள் தகா்கின்றனா் தீவனங்கள் உற்பத்திய பெருக புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து வருகிறோம் வரும் காலகட்டங்களில் பாலுக்கு அதிக விலை கொடுப்போம் என்றாா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT