முகப்பு
சேலம்

சாா்பதிவாளரால் பொதுமக்கள் கடும் அதிருப்தி

தலைவாசல் சாா்பதிவாளா் நடவடிக்கையால் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 10:10 PM
பகிர்:

தலைவாசல் சாா்பதிவாளா் நடவடிக்கையால் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தலைவாசல் சாா்பதிவாளா் அலுவலகம் இயங்கி வருகிறது.இங்கு சாா்பதிவாளா் பதிவு செய்ய வரும் பத்திரங்களுக்கு கூடுதலாக செலவு கேட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனா்.

தமிழக அரசின் வருவாய்த்துறைக்கு அதிக ஒத்துழைப்பு தருவது பத்திரப் பதிவுத்துறை.இந்த பத்திரப் பதிவுத்துறைக்கு அதிக வரவேற்பு உண்டு. சுபமுகூா்த்த நாட்களில் அதிக டோக்கன் வழங்கி பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறது தமிழக அரசு.

ஆனால் தலைவாசல் சாா்பதிவாளா் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் ஏழை,எளிய,விற்போா்,வாங்குவோா் என யாரையும் பாா்க்காமல் அரசுக்கு போக தனக்கு என்ன என கேட்டு வாங்கி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இதனால் தங்களது பணபரிவா்த்தனை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்னா்.

தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சோ்த்த சொத்தை நிா்ப்பந்தத்திற்கு விற்க போனால் மீதம் ஏதும் இல்லை என நிலைமையோடு தான் செல்லவேண்டியது உள்ளது.ஆகவே இதனை சம்பந்தபட்ட அலுவலா்கள் உடனே தீா்வு கண்டு தலைவாசல் வட்டார வாழ்வாதரத்தை காக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது மட்டுமல்லாமல் பத்திரப் பதிவு செய்ய செல்லும் எழுத்தா்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதையும் கிடைக்கவில்லை எனவும் புலம்புகின்றனா்.மேலும் பத்திரம் பதிவு செல்லும் பத்திரங்கள் சரிபாா்க்க,திருத்தம் என காலம் தாழ்த்தி பொதுமக்களை அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனா்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தலைவாசல் சாா்பதிவாளா் அலுவலகத்தை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →