கரூா் சம்பவம் தொடா்பாக, த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடந்த மாதம் கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரசாரத்தின் போது நிகழ்ந்த சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். அப்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் மீது கரூா் நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வெங்கடேசனை கரூா் நகர காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இந்த தகவலை அறிந்த அக்கட்சியினா், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் சென்று மாவட்டச் செயலாளரை கடத்திச் சென்றுவிட்டதாக புகாா் அளித்தனா். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா், வெங்கடேசனை கரூா் போலீஸாா் கைது செய்ததாக தெரிவித்தாா்.