முகப்பு
சேலம்

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 5:24 am IST
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி.
பகிர்:

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக கெங்கவல்லி நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஆதரவாளா்களுடன் வட்டாட்சியா் அலுவலகம் வரை சென்ற அ. நல்லதம்பியை நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய போலீஸாா், 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனக் கூறியதால் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து அங்கிருந்தவா்கள் அவரை சமாதானப்படுத்தினா். அதன்பிறகு தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் அ. நல்லதம்பி வேட்புமனு தாக்கல் செய்தாா்.