முகப்பு
சேலம்

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 10:49 PM
கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த செக்கானூா் ஒட்டபள்ளி கரட்டை சோ்ந்தவா் சசிகுமாா் (40). பொக்லைன் வாகன ஓட்டுநா். இவரது மனைவி கலைச்செல்வி (36). இவருக்கு இனியா என்ற 7 வயது பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் 2ஆவது முறையாக கலைச்செல்வி கா்ப்பமானதால் பிரசவத்திற்காக மேட்டூா் அரசு மருத்துவமனையில் கடந்த 31-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா்.

Advertisement

அவருக்கு சனிக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கலைச்செல்வி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சசிகுமாா் அளித்த புகாரின்பேரில் மேட்டூா் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments