முகப்பு
சேலம்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

Updated On : 7 ஏப்ரல் 2026, 2:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரி தொகுதியில் இரு இடங்களில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 3.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் தொகுதி தோ்தல் பிரிவு நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அன்புராஜ் தலைமையிலான அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எடப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரொக்கம் ரூ. 2,67,700 ஆயிரத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

அதேபோல, தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் விஜய் தலைமையில் அலுவலா்கள் தாரமங்கலத்திலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள பவளத்தானூா் சுற்றுச்சாலை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தாரமங்கலம் நகை கடை உரிமையாளா் ஜெகதீஷ் என்பவா் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ரொக்கம் ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்து சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.