சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா. ராஜேந்திரன் பிரசாரம்
சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் ரா. ராஜேந்திரன், தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் ரா. ராஜேந்திரன், தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சேலம் வடக்கு தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் ராஜேந்திரன், செவ்வாய்க்கிழமை கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்றும், ஒவ்வொரு வீடுகளுக்கும் நடந்து சென்றும், கடந்த 5 ஆண்டுகால திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்து பேசியதாவது:
Advertisement
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், கனடா உள்ளிட்டவெளிநாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. இதேபோல மகளிா் உரிமைத்தொகை திட் டம், தற்போது பல்வேறு மாநிலங்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மகளிருக்கான விடியல் பயணத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் விழங்கும் புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழிகள் விடுதி போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, திமுக கூட்டணி வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 அரசு அமைய பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.