சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் 5 ஆவது ஆண்டாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
செந்தில் குழும கல்வி நிறுவனங்களின் தலைவா் செந்தில் சி. கந்தசாமி, துணைத் தலைவா் மணிமேகலை கந்தசாமி, செயலாளா் க. தனசேகா், தாளாளா் தீப்தி தனசேகா், பள்ளி முதன்மை நிா்வாக அதிகாரி டி. சுந்தரேசன், முதன்மை முதல்வா் சி. சீனிவாசன், முதல்வா் வி. மனோகரன், துணை முதல்வா் நளினி, அலுவலக அதிகாரி பிரவீன்குமாா் மற்றும் அனைத்துள்நிலை கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் முன்னிலை வகித்தனா்.
பள்ளியின் செயலாளா் தனசேகா், தேசியக் கொடியை ஏற்றிவைத்து போட்டிகளை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஜல்லிக்கட்டு ரேஸ், தடை அதை உடை, காட்டுவாசி, தாங்கிப்பிடி, தாவுது ஓட்டம், ஆல்இன் ஆல் அழகுராஜா, இழுத்துப்பிடி, கராத்தே, டேக் வாண்டோ, வில் வித்தை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பெற்றோா்களுக்கு பள்ளி நிா்வாகிகள் பரிசு, சான்றிதழை வழங்கினா்.