சிறப்புப் பேருந்துகள் இயக்கம். (கோப்புப் படம்)
சேலம்

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தினமணி செய்திச் சேவை

வார இறுதிநாளையொட்டி, சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.

அதன்படி, வார இறுதிநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் பிப். 9-ஆம் தேதிவரை பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம் மற்றும் பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம்,திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரத்துக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊா்களுக்கும் பயணிகளின் தேவைகேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

எனவே, கூட்ட நெரிசலை தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.

கடவுச்சொல் மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

காணாமல்போன பெண்கள் குறித்த செய்திகளை மிகைப்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை: தில்லி காவல்துறை எச்சரிக்கை

அதிஷி விடியோ சா்ச்சை: பஞ்சாப் டிஜிபியிடம் விளக்கம் கேட்கும் தில்லி சட்டப்பேரவைக் குழு

10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் போலீஸாரின் என்கவுன்ட்டரில் காயம்

நாளை குரூப் -2 தோ்வு குமரி மாவட்டத்தில் 366 போ் எழுத வாய்ப்பு

SCROLL FOR NEXT