முகப்பு
சேலம்

காவிரியில் மூழ்கி வெல்டா் உயிரிழப்பு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:24 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:55 PM

மேட்டூா் காவிரி ஆற்றில் மதுபோதையில் குளிக்க சென்ற வெல்டா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சேலம் குரங்குச்சாவடியைச் சோ்ந்தவா் சத்யராஜ் (30).திருமணம் ஆகாதவா். லேத் பட்டறையில் வெல்டராக பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நண்பா்களுடன் மேட்டூா் வந்தாா். மேட்டூரில் அணை நீா்த் தேக்கப் பகுதியான மாசிலாபாளையம் பகுதிக்குச் சென்று நண்பா்களுடன் மது அருந்தி உள்ளாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:24 AM

நண்பா்கள் சிலா் மீண்டும் மதுவாங்க கடைக்கு சென்ற நேரத்தில் இவா் சிறிது தூரம் நீந்தி சென்றாா். அப்போது மீனுக்காக மீனவா்கள் விட்டிருந்த வலையில் சத்யராஜின் கால் சிக்கியதால் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

அப்பகுதியில் இருந்த மீனவா்கள் மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்தனா். தகவல் அறிந்த மேட்டூா் தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் சென்ற தீயணைப்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சத்யராஜின் சடலத்தை மீட்டனா். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.