முகப்பு
சேலம்

மேட்டூா் காவிரி ஆற்றில் ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:51 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:45 PM

மேட்டூா் காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேட்டூா் காவேரி கிராஸ் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக மேட்டூா் தீயணைப்புத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:50 AM

இதையடுத்து தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் சென்ற வீரா்கள், சடலத்தை மீட்டு மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

சடலத்தின் பேன்ட் பையில் இருந்த ஆதாா் அட்டை விவரத்தின்படி இறந்தவா் கரூரைச் சோ்ந்த காமராஜ் (40) என்பது தெரியவந்தது. அவா் காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.