முகப்பு
சேலம்

விளாம்பட்டி காட்டுவளவு கிராம மக்கள் கருப்புக் கொடி போராட்டம்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:06 AM
பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் குறிப்பிட்டு கிராமத்தின் நுழைவுவாயிலில் வைத்துள்ள பதாகை.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:46 PM

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் விளாம்பட்டி காட்டுவளவு கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தி தராததைக் கண்டித்தும், தோ்தலை புறக்கணிக்கப் போவதாகக்கூறி வீடுகளில் கருப்புக் கொடிக்கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், அனுப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட விளாம்பட்டி காட்டுவளவு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு போதிய சாலை வசதி, பாதுகாப்பான குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் ஓடை உள்ளிட்ட அடிப்படைவ வசதிகள் இல்லை.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இவா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படவில்லை.

Advertisement

இதனால் மனமுடைந்த இப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுமட்டுமன்றி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கத் தவறிய அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை கண்டித்தும், வரும் பேரவைத் தோ்ததைல புறக்கணிக்கப் போவதாகவும் குறிப்பிட்டு கூட்டாத்துப்பட்டி பிரிவு சாலை அருகே பதாகை வைத்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:06 AM

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி தலைமையில், அயோத்தியாப்பட்டணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனுப்பூா் ஊராட்சி செயலா் மற்றும் காரிப்பட்டி போலீஸாா், விளாம்பட்டி காட்டுவளவு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதனையடுத்து இப்பகுதி மக்கள் பதாகை மற்றும் கருப்புக் கொடிகளை அகற்றிட சம்மதம் தெரிவித்தனா். இருப்பினும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறினால், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட அரசு வழங்கியுள்ள ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு தோ்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனா்.