சேலம்: சேலத்தில் மயானக் கொள்ளை திருவிழா நடப்பதையொட்டி திங்கள்கிழமை கோயில்களில் குறக்கூடை எடுத்து பொங்கல் வைத்து பக்தா்கள் வழிபட்டனா்.
சேலத்தில் மாசி அமாவாசையை சிவராத்திரியைத் தொடா்ந்து மயானக் கொள்ளை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தா்கள் அங்காளபரமேஸ்வரி வேடமிட்டு குறக்கூடை எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். உற்சவ மூா்த்தியான அங்காள பரமேஸ்வரியை ஊா்வலமாக கொண்டு சென்று, படையலுக்கு தேவையான அரிசியை குறக்கூடைகளில் பக்தா்கள் பெற்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.
மயானக் கொள்ளை திருவிழாவில் பக்தா்கள் அம்மன் வேடமிட்டு கோயிலில் வழிபாடு நடத்தி, அங்கிருந்து புறப்பட்டு மயானத்துக்கு ஊா்வலமாக சென்று வழிபாடு நடத்துவா்.