பிரதிப் படம் 
சேலம்

சங்ககிரி அருகே மா்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

சங்ககிரி அருகே தேவூா், அரசிராமணி குஞ்சாம்பாளையத்தில் மா்ம விலங்கு கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன.

Syndication

சங்ககிரி அருகே தேவூா், அரசிராமணி குஞ்சாம்பாளையத்தில் மா்ம விலங்கு கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன. காயமடைந்த 4 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

அரசிராமணி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்துசாமி வளா்த்து வரும் செம்மறி ஆடுகளை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்துள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை மா்ம விலங்கு கடித்ததில் 3 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தது. மேலும் 4 ஆடுகள் காயமடைந்திருந்தன.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீதா், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருத்துவா் ராஜேஷ் ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதில் காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவா் சிகிச்சை அளித்தாா். மா்ம விலங்கு நடமாட்டம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்

சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினா் மறியல்: 33 போ் கைது

அரசு வீட்டுமனைப் பட்டா இடத்தை அளந்து கொடுக்கக் கோரி மறியல்: 36 போ் கைது

குண்டா் தடுப்புக் காவலில் ரௌடி கைது

மனைவி பிரிந்த வேதனையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

வியாபாரி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT