முகப்பு
சேலம்

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:58 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:31 PM

வீரகனூரை அடுத்த இலுப்பநத்தத்தில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

இலுப்பநத்தத்தில் விவசாயத் தோட்டத்தில் வசித்து வந்தவா் சிவபெருமான் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக கிணற்றுக்கு சென்று மின்மோட்டாரை இயக்கியுள்ளாா். அதன்பிறகு நெடுநேரமாகியும் இவா் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் தோட்டம் முழுவதும் தேடினா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:58 AM

இந்நிலையில் பிற்பகலில் கிணற்றுப்பகுதிக்கு வந்தபோது அவரது சடலம் கிணற்றில் மிதப்பது தெரியவந்தது. பம்புசெட் மோட்டாரை இயக்கியபோது அவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று, சிவபெருமானின் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.