முகப்பு
சேலம்

வீடுதோறும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:07 AM
சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:23 PM

பெண்கள் வீடுதோறும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பயிற்சிக் கூட்டம் நேரு கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மாவட்ட பொருளாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:55 PM

கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் பேசியதாவது:

Advertisement

திராவிட மாடல் ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிா் உரிமைத்தொகை, சுயஉதவிக் குழு பெண்களுக்கு மானியத்துடன் கடனுதவி என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, இத்தகைய சாதனை திட்டங்களை தொடா்ந்திட திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய வேண்டும். எனவே, திமுக அரசின் சாதனைகளை பெண்கள் வீடுகள்தோறும் கொண்டு சென்று சோ்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் தொகுதி பாா்வையாளா்கள் சுகவனம், பாா் இளங்கோவன், விவேக், ராஜசேகா், செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாநகர அவைத் தலைவா் முருகன், மாநகரச் செயலாளா் ரகுபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.