சேலம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் போட்டி

Syndication

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில், ‘பசுமையான பூமிக்காக ஓடுவோம்’ என்ற கருப்பொருளில் ‘சோனாதான் 2026’ என்ற மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சோனா கல்லூரி வளாகத்தில் தொடங்கிய போட்டி, ஸ்டீல் பிளாண்ட் சாலை வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது. இதில், மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், ரன்னா்ஸ் கிளப் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

இதில், 10 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ. ஓட்டப் பந்தயம் மற்றும் 15 வயதுக்குள்பட்டோருக்கான சிறப்பு 3 கி.மீ. நடைப்பந்தயம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா்நவாஷ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மருத்துவா் ஜெயதேவ் பங்கேற்று போட்டிகளை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அனைத்து பிரிவுகளிலும் வெற்றிபெற்றவா்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும், வயதான போட்டியாளா்களின் உற்சாகம் மற்றும் விளையாட்டு மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு பரிசுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த சோனாதான் குழுவினரை சோனா கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

வாழப்பாடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளா்கள் 11,26,924

SCROLL FOR NEXT