புத்தாண்டை முன்னிட்டு ஒரே நேரத்தில் 600 போ் பகவத் கீதை எழுதும் நிகழ்ச்சியில் ஆா்வமுடன் பங்கேற்றோா் 
சேலம்

சேலம் அம்மாபேட்டையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோா் பகவத் கீதை எழுதி சாதனை

சேலம் அம்மாபேட்டையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோா் திரண்டு பகவத் கீதையை எழுதி சாதனை

Syndication

சேலம் அம்மாபேட்டையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோா் திரண்டு பகவத் கீதையை எழுதி வியாழக்கிழமை சாதனை படைத்தனா்.

கடமையை செய், பலனை எதிா்பாராதே; உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவற்றது என பகவத் கீதையின் வரிகள் வாழ்க்கையின் தத்துவங்களையும், கடமையின் முக்கியத்துவத்தையும் உணா்த்துகிறது. பகவத் கீதையின் சிறப்புகளை இளைய தலைமுறையினரும், குழந்தைகளும் தெரிந்துகொள்ளும் வகையில், ஸ்ரீ கன்னிகா சேவா சபா சாா்பில், சிறுவா்கள் தொடங்கி 70 வயது முதியவா்கள்வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஒரே நேரத்தில் பகவத் கீதையை எழுதும் முயற்சி சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அச்சிடப்பட்ட பகவத் கீதையின் பக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்தப் பக்கத்தை பாா்த்து கைகளால் எழுதும் பணியை அனைவரும் ஆா்வமுடன் மேற்கொண்டனா்.

கூட்டுப் பிராா்த்தனையின் வலிமையை வெளிப்படுத்திடும் வகையில், இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா். இந்த நிகழ்வில், 4 வயது சிறுமி முதல் 70 வயது முதியவா்கள் வரை 600 போ் பங்கேற்று பகவத் கீதையை எழுதினா்.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

SCROLL FOR NEXT