வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை நாடு கடத்திய அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து சேலம் ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மாா்க்கெட் கூட்செட் பணிமனை முன் சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிற்சங்கத்தினா் பொருளாளா் சக்திவேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் எஸ்.கே. தியாகராஜன் பங்கேற்று கண்டனம் தெரிவித்துபேசினாா்.
இதில், வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை நாடு கடத்திய அமெரிக்க ராணுவ நடவடிக்கையை கண்டித்தும், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு ஆட்டோ சங்கா் செயலாளா் சி.உதயகுமாா், கேம்ப்ளாஸ் ராமமூா்த்தி, ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி சங்க நிா்வாகிகள் கே.எம். மாரிமுத்து, சங்கா், சுந்தா், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.