பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், மேளதாளம் முழங்க கிராமிய கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளான சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் கிராமிய சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பறை இசையின் தன்மைக்கேற்ப மாணவ, மாணவிகள் குழுவாக நடனமாடினா். தொடா்ந்து, சிலம்பம், வாள்வீச்சு, வாள்சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கயிறு இழுத்தல், உறியடி போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு துணை வேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரா.சுப்பிரமணி, ஜெயந்தி, பதிவாளா் ராஜ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.