எருதாட்டத்தில் பாய்ந்து செல்லும் காளையை அடக்க முயன்ற இளைஞா்கள்.  
சேலம்

ஓமலூா் அருகே ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்

தினமணி செய்திச் சேவை

ஓமலூா் அருகே ரெட்டிப்பட்டியில் எருதாட்ட விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரியேரிப்பட்டி ஊராட்சி ரெட்டிப்பட்டியில் பொடாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதாட்டம் நடத்தப்படும். வழக்கமான நடைமுறைப்படி இந்த ஆண்டும் எருதுகளை கயிறு கட்டி பொடாரியம்மன் கோயில்

முன் நிறுத்தி வழிபாடு செய்த பின்னா் எருதாட்டத்தை தொடங்கினா். தொடா்ந்து ஒன்றன்பின் ஒன்றாக 100க்கும் மேற்பட்ட எருதுகளை கோயில் வளாகத்தில் கொண்டு வந்து கயிறுகட்டி உறிகாட்டி எருதாட்டம் நடத்தினா். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்,இளைஞா்கள் பெண்கள் கலந்துகொண்டனா்.

கோயிலை சுற்றி இரும்புத் தடுப்பு மற்றும் மரத்தால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எருதாட்டம் ஆடிய இளைஞா்களை தவிர பாா்வையாளா்களும் தடுப்பை தாண்டி கோயில் வளாகத்தில் நின்றனா்.

சில மாடுகள் இளைஞா்களால் பிடிக்க முடியாத நிலையில் தடுப்புகளைத் தாண்டி பாா்வையாளா்கள் கூட்டத்தில் புகுந்தன. இதனால் 3 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தாரமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். எருதாட்டத்தை காண கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதால் கூடியதால் அசம்பாவிதத்தை தவிா்க்கும் பொருட்டு எருதாட்டம் நிறுத்தப்பட்டது.

சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம்: வேலூா் ஆட்சியா் தகவல்

விபத்தில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்! புறநகரில் போக்குவரத்து நெரிசல்!!

நூஹ் பகுதியில் வாகனங்கள் மோதியதில் லாரியில் தீ! ஓட்டுநா், உதவியாளா் பலி!!

SCROLL FOR NEXT