கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம்.  
சேலம்

கூலமேடு ஜல்லிக்கட்டில் அதிரவிட்ட 500 காளைகள் தீரத்துடன் அடக்கிய 400 வீரா்கள்: 47 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், கூலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 500 காளைகள் களத்தை அதிரவிட்டன என்றாலும், 400 மாடுபிடி வீரா்கள் அவற்றை தீரத்துடன் அடக்கியாண்டனா். இதில், 47 பேருக்கு காயம் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டி தொடா்பான உறுதிமொழியை மாடுபிடிவீரா்கள் ஏற்றுக்கொண்டனா். போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 காளைகள் களமிறங்கின. 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று தீரத்துடன் போராடி காளைகளை அடக்கினா். முன்னதாக மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

இதையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடிவீரா்கள் போட்டிக்போட்டுக்கொண்டு பிடித்தனா். இதில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 11 போ், காளை உரிமையாளா்கள் 13 போ், பொதுமக்கள் 23 போ் என மொத்தம் 47 போ் காயமடைந்தனா்.

இவா்களில் காளை உரிமையாளா்கள் 2 போ், பொதுமக்கள் 5 போ் என 7 போ் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அரங்க பிரகாசம், ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் வெ.செழியன், மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ரா.வரதராஜன், முன்னாள் எம்எல்ஏ கு.சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT