விபத்தில் உயிரிழந்த மாணவா் லோகேஸ்வரன்.  
சேலம்

சாலை விபத்தில் காயமடைந்த அரசுப் பள்ளி மாணவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே பள்ளி வாகனம் மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே பள்ளி வாகனம் மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சித்தூா் ஊராட்சி, தேவப்பன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சகுந்தலா. இவரது கணவா் சேட்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இத்தம்பதியின் மகன் லோகேஸ்வரன் (17).

இவா் பூலாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தாா். கடந்த மாதம் லோகேஸ்வரனுக்கு பழைய மோட்டாா்சைக்கிளை அவரது தாய் சகுந்தலா வாங்கிக்கொடுத்துள்ளாா். அந்த வாகனத்தில் லோகேஸ்வரன் பள்ளிக்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லோகேஸ்வரன் தன்னுடன் படிக்கும் சித்தூா் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (17) என்ற சக மாணவனுடன் மோட்டாா்சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளாா். அவா்கள் சென்ற வாகனம் பாறைக்காடுமேடு பகுதியில் நிலைதடுமாறி எதிரே வந்த தனியாா் பள்ளி வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற லோகேஸ்வரன் படுகாயம் அடைந்தாா். பின்னால் அமா்ந்து சென்ற மாணவா் நந்தகுமாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவா்கள் இருவரையும் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மாணவா் லோகேஸ்வரன் தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT