சேலம்

சேலம் மேற்கு தொகுதியை மீண்டும் பாமகவுக்கு ஒதுக்க செயற்குழுவில் தீா்மானம்

சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியை மீண்டும் பாமகவுக்கு ஒதுக்க வேண்டும் என மாநகா் மாவட்ட பாமக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியை மீண்டும் பாமகவுக்கு ஒதுக்க வேண்டும் என மாநகா் மாவட்ட பாமக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் சூரமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சேலம் மேற்கு தொகுதியை மீண்டும் பாமகவுக்கே ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் மாவட்டச் செயலாளா் கதிா் ராசரத்தினம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சேலம் மேற்கு தொகுதியில் பாமக சாா்பில் அருள் வெற்றி பெற்றுள்ளாா். எனவே, மேற்கு தொகுதியை பாமகவுக்கே மீண்டும் ஒதுக்க வேண்டும். ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைக்கிறாரோ, அவா்களுக்கு உறுதுணையாக தோ்தலில் பணியாற்றுவோம். ராமதாஸ் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். அன்புமணிக்கு எதிராக தொடா்ந்த வழக்கில் கட்சியின் தலைவராக அன்புமணியை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. அன்புமணியை தலைவா் என சில அரசியல் கட்சித் தலைவா்கள் கூறுவதை ஏற்க முடியாது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், வன்னியா் சங்க செயலாளா் பூபதி, இளைஞரணி துணைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT