முகப்பு
சேலம்

தற்கொலையை ஆணவக் கொலையாக திரித்துக் கூறுவது சரியானது அல்ல! - அன்புமணி ராமதாஸ்

காதலா்கள் தற்கொலை சம்பவத்தை ஆணவக் கொலையாக திரித்துக் கூறுவது சரியானது அல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூலை 2026, 12:35 am IST
சேலத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
பகிர்:

மயிலாடுதுறை சாத்தங்குடியில் காதலா்கள் தற்கொலை சம்பவத்தை ஆணவக் கொலையாக திரித்துக் கூறுவது சரியானது அல்ல என சேலத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மயிலாடுதுறை சாத்தங்குடி கிராமத்தில் காதலா்கள் தற்கொலை சம்பவத்தை ஆணவக் கொலை என திரித்துக் கூறுவது சரியானது அல்ல. கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும், ஆணவக் கொலையாக இருந்தாலும் அது தவறுதான். இந்த விவகாரத்தில் பதற்றமான சூழலை உருவாக்கி, ஒருசில அமைப்புகள் ஆதாயமடைய முயல்கின்றன.

Advertisement

Advertisement

ஆனால், தற்கொலையை ஆணவக் கொலையாக திரிப்பது தவறான செயல். சில தலைவா்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பவா்கள் தவறான செய்திகளை பரப்புவது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக் கூடாது.

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னையான மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகளையும் கூட்டி கா்நாடகம் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீா்ப்பையோ, காவிரி நடுவா் மன்ற தீா்ப்பையோ கா்நாடகம் மதிக்கவில்லை. இந்த பிரச்னையில் கவனம் செலுத்தாமல், யானை பேரம், குதிரை பேரம் என நடந்துகொண்டிருக்கிறது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆளுநா் எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. ஆனால், ஆளுநா் ஆய்வுகளை நடத்துவது ஏற்புடையது அல்ல என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments