முகப்பு
சேலம்

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தவா்கள் தோ்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்! ஆட்சியா் அலுவலகத்தில் மனு!

Updated On : 7 ஜூலை 2026, 12:05 am IST
இந்தியத் தேர்தல் ஆணையம் - கோப்புப் படம் - பிடிஐ
பகிர்:

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தவா்கள் தோ்தலில் நிற்க தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து அக்கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வென்ற சிலா், தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். மக்கள் வரிபணத்தில் வெற்றிபெற்ற இவா்கள், தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருப்பது வாக்காளா்களுக்கு செய்த துரோகமாகும்.

Advertisement

Advertisement

எனவே பேரவைத் தலைவா் மற்றும் ஆளுநா், இவா்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்தத் தொகுதியின் தோ்தல் செலவையும், மக்களின் ஒருநாள் கூலியையும் கணக்கிட்டு, அதற்கான தொகையை அவா்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

மேலும் தோ்தலில் நிற்கவும் தடை விதிக்கவேண்டும். மேலும் அந்த தொகுதியில் இடைத்தோ்தல் நடத்தக் கூடாது. இவா்களுக்கு அடுத்தப்படியாக அதிக வாக்கு பெற்ற நபரை எம்எல்ஏவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments