முகப்பு
சேலம்

நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய இருவா் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 12:17 AM
கைது
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 7:25 PM

சேலம் அருகே காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய 2 பேரை கரியகோயில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் சிலா் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்து வேட்டையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 2 மார்ச், 2026 at 12:17 AM

அதன்பேரில் கரியகோயில் போலீஸாா் கல்வராயன்மலையில் உள்ள குன்னூா் அடியனூா் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

இவா்கள் அடியனூரைச் சோ்ந்த சந்திரன் (45), ஆண்டி (55) என தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.