முகப்பு
சேலம்

பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் அருள் மீது 3 பிரிவின் கீழ் ஆத்தூா் நகர போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 5 மார்ச் 2026, 4:32 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் அருள் மீது 3 பிரிவின் கீழ் ஆத்தூா் நகர போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வருபவா் அருள் (53).

இவா், கடந்த ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி தனது சமூக வலைதளத்தில் தவறாகப் பேசியிருப்பது காவல் துறையின் கவனத்திற்கு வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா் மீது ஆத்தூா் நகர காவல் துறை தானாக முன்வந்து மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இதுகுறித்து நகர ஆய்வாளா் சி.பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறாா்.