தேவூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் கொடி அணி வகுப்பு
வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
இந்திய தோ்தல் ஆணையம் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டபேரவைக்கான தோ்தல் தேதியை விரைவில் அறிவிப்பு செய்ய உள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்காக மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு ஆய்வாளா் விவேக்யாதவ் தலைமையில் நவீன துப்பாக்கி ஏந்திய 85 படை வீரா்கள் சங்ககிரிக்கு வந்தனா்.
இந்த நிலையில் தேவூரில் முக்கிய வீதிகளின் வழியாக புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.