வேம்படிதாளம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி, திருவளிப்பட்டி ,சந்தை பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்க 12-ம் தேதி வியாழக்கிழமை வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சண்முகம், ராஜேந்திரன், திருமூா்த்தி , மகாலிங்கம், தனசேகா், மணிகண்டன், கருணாநிதி, சேகா், விக்னேஷ்வரன் , ஊராட்சி செயலாளா் அருள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
பட விளக்கம்:
வேம்படிதாளம் ஊராட்சி, திருவளிப்பட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்க வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.