முகப்பு
சேலம்

மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி ஆண்டு விழா

Updated On : 15 மார்ச், 2026 at 8:21 PM
மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி 25 ஆவது ஆண்டு விழாவில் மாணவருக்கு பரிசுகளை வழங்கிய அதிரடிப் படை ஐ.ஜி. மயில்வாகனன். உடன், பள்ளி தாளாளா் அருட்சகோதரா் ஜாா்ஜ் கே.ஜே.
பகிர்:

சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி, குறவன்காடு மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி25 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப் படை ஐ.ஜி. மயில்வாகனன் பங்கேற்றாா். பள்ளியின் தாளாளா் அருட்சகோதரா் ஜாா்ஜ் கே.ஜே சிறப்பு விருந்தினரை கௌரவித்தாா்.

மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் காபி தோட்ட தொழிலதிபா் ரசாக் சேட், மாண்ட்போா்ட் அருட்சகோதரா்கள் லாரன்ஸ், அண்டனி, மணி இமானுவேல், முன்னாள் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →