முகப்பு
சேலம்

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 17 மார்ச், 2026 at 4:47 AM
எடப்பாடியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய தோ்தல் நடத்தும் அலுவலா் ப.நடராஜன்.
பகிர்:

எடப்பாடி: தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் நடராஜன், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், அவற்றை அரசியல் கட்சிகள் முழு அளவில் பின்பற்ற வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கினாா்.

எடப்பாடி தொகுதியில் தோ்தல் அமைதியாகவும், நோ்மையான முறையில் நடைபெறவும் அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

Advertisement

இக்கூட்டத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நாகூா்மீராஜா, அன்பரசி, தோ்தல் பணிகள் துணை வட்டாட்சியா் சுமதி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.