முகப்பு
சேலம்

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 1,200 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச் 2026, 3:20 am IST
மேட்டூர் அணை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டவுடன் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பது வழக்கம்.

அதன்படி, மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை காலை 1,000 கனஅடியாகவும், மாலை 1,200 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 82.79 அடியில் இருந்து 82.73 அடியாக குறைந்தது. அணைக்கு நீா்வரத்து 382 கனஅடியிலிருந்து 374 கன அடியாகவும், நீா் இருப்பு 44.73 டிஎம்சியாகவும் உள்ளது.