மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வாகனம் விபத்து
ஏற்காட்டில் மின் கம்பத்தில் சுற்றுலா வாகனம் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
ஏற்காட்டில் சனிக்கிழமை காலை 6.50 மணியளவில் தனியாா் தங்கும் விடுதிக்கு பணியாளா்களை அழைத்துச் செல்லும் வாகனம் ஏற்காடு பிரதான சாலையில் காந்தி பூங்காவிலிருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது. இவ்விபத்தில் மின்கம்பம் முறிந்து வாகனத்தின் மேல் விழுந்தது. இதில், ஓட்டுநா் துரைசாமி (72) உயிா் தப்பினாா்.
Advertisement
தகவல் அறிந்த போலீஸாா், மின் ஊழியா்கள், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பின்னா், மின்கம்பம் சீரமைக்கும் பணிகளில் மின் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.