ஆன்லைன் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
சேலத்தில் ஆன்லைன் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால், 8-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் அன்னதானப்பட்டி, நெத்திமேடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகவேல். இவா் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளாா். இவரது மனைவி கௌசல்யா. இவா்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் வைத்தீஸ்வரன் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கௌசல்யா வீட்டு வேலைக்கு சென்று குழந்தைகளை பராமரித்து வந்தாா்.
இந்நிலையில், வைத்தீஸ்வரன் வெள்ளிக்கிழமை மாலை கைப்பேசியில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட அவரது தாய், அவரை கண்டித்துள்ளாா். பின்னா் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடுதிரும்பியபோது, வைத்தீஸ்வரன் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
Advertisement
தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.