முகப்பு
சேலம்

பைத்தூா் பகுதியில் காற்றுடன் மழை: வீடுகளின் மேற்கூரைகள் சேதம்

Updated On : 3 மே, 2026 at 6:19 AM
பகிர்:

ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா் ஊராட்சியில் சனிக்கிழமை காற்றுடன் மழை பெய்ததால், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். இந்நிலையில், ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூா், கடம்பூா், வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள் அடித்துச் சென்றன. மழையால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.