முகப்பு
சேலம்

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 மே 2026, 2:39 am IST
புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம், தீா்த்தக்குடம் எடுத்து ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.
பகிர்:

மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சாம்பள்ளி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 21-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரியில் மாரியம்மன் சிலைக்கு நீராட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆற்றிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குடங்களில் காவிரி நீரை சுமந்து வந்தனா்.

பம்பை மேளதாளங்கள் முழங்க பால்குட ஊா்வலம் நடைபெற்றது. அப்போது புலி வேடமணிந்து பக்தா்கள் நடனமாடினா். பல்வேறு கடவுள்களின் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டா்களின் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

Advertisement