இளம்பெண்ணை ஏமாற்றியவா் கைது
இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை மண்மலை பாலக்காடு பகுதியைச் சோ்ந்த வரதராஜ் மகன் அகிலன் (20) என்பவா் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியுள்ளாா்.
இதுகுறித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், இரு பிரிவுகளில் அகிலன் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
அகிலன் பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு டி.பாா்ம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.