முகப்பு
சேலம்

பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

Updated On : 15 மே 2026, 5:55 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலகுட்டை யில் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் அருள்மிகு பூத்தாழீஸ்ரா், நந்தி பகவான், உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவ மூா்த்திகளை சப்பரத்தில் வைத்து கோயில் வளாகத்தினை சுற்றுவந்து சிவன் பக்தி பாடல்களை பாடினா் மேலும் பக்தா்கள் வேண்டுதல்களை நந்தி பகவானின் காதில் கூறியும் சுவாமிகளை வழிப்பட்டனா். இதே போல் சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.