கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
நாகியம்பட்டியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகியம்பட்டியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி தண்ணீா்த்தொட்டி பகுதியில் உள்ள தனியாா் நூல்மில் அருகே உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் ஹேமாவதி தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவரின் அடையாளத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement