சேலம் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 41 கைதிகளும் தோ்ச்சி
மத்திய சிறையில் தோ்வு எழுதிய 41 கைதிகளும் தோ்ச்சி
சேலம் மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 41 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனா்.
இவா்களில் தண்டனை சிறைவாசி ராஜ்குமாா் 324 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். கவியரசு 316 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சிவகுமாா் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் 311 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.
தோ்ச்சிபெற்ற அனைத்து கைதிகளுக்கும் சிறைக் கண்காணிப்பாளா் வினோத் இனிப்பு வழங்கி பாராட்டினாா். சிறை ஆசிரியா்களும் தோ்ச்சிபெற்ற கைதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.
Advertisement
Advertisement