மாணவியிடம் அத்துமீறல்: கிராம நிா்வாக அலுவலா் கைது
சேலத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், எருமாப்பாளையம் பகுதியில் பிளஸ் 2 தோ்ச்சிபெற்ற மாணவி, அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், வாகனத்தை நிறுத்திவிட்டு மாணவிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி சப்தமிடவே, அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த நபரை தாக்கினா். இதில், அவருக்கு முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அம்மாப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில், அந்த நபா் எருமாபாளையத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பதும், வாழப்பாடி வட்டம் பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாலகிருஷ்ணனை போக்சோ வழக்கில் சிறையில் அடைக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.