FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கோயில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

லட்டு பிரசாதம் - பிரதிப் படம்
பகிர்:

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

கன்னியாகுமரியைச் சோ்ந்த நாகராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரசாதங்கள் ஜூலை 1 முதல் அந்தந்தக் கோயில் நிா்வாகங்கள் சாா்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் என கடந்த மாதம் 16-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

எனவே, இந்த அரசாணையை புதன்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கோயில்களில் பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களில் அரசாணை முறைப்படி நாளை முதல் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் தயாரித்து தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments