திண்டுக்கல்

தேசிய அளவில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள்  சீருடைகள் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்கள், விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.
 இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் தெரிவித்துள்ளது:
2016-17ஆம் ஆண்டில் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட உள்ளன.  அதன்படி தங்கம் வென்றவர்களுக்கு ரூ.6ஆயிரம் மதிப்பிலும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4ஆயிரம் மதிப்பிலும்,  வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2ஆயிரம் மதிப்பிலும் சீருடைகள் வழங்கப்படும்.  தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள்,  பதக்கம் வென்றதற்கான சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்களுடன் ஜூலை 26-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT