திண்டுக்கல்

பழனியில் நாக காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

பழனி அடிவாரம் மதனபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு நாககாளியம்மன், அருள்மிகு கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை யாக சாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால பூஜையைத் தொடர்ந்து யாத்ரா தானம் நடத்தப்பட்டு கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டது. காலை 6.30 மணியளவில் நாககாளியம்மன் மற்றும் கருப்பண்ணசாமி கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அன்னதானமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT