முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடர் மழை: விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 இங்கு கடந்த 3 நாள்களாக கொடைக்கானல், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், பிரகாசபுரம், சீனிவாசபுரம், அப்சர்வேட்டரி, பூம்பாறை, குண்டுபட்டி, கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மழை நின்றதால் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதுகுறித்து கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் கூறியதாவது:
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த பல நாள்களாக பரவலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து பீன்ஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் செடிகள் அழுகி பாதிப்பு ஏற்படுவதுடன், மருந்து தெளித்தால் பயனிருக்காது. எனவே மழை நின்றால் மட்டுமே விவசாயப் பயிர்களுக்கு மருந்து தெளித்து அவற்றை பாதுகாக்க முடியும்.
மேலும் பீன்ஸ் செடியில் அழுகல் நோய் தாக்கி வருவதால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது. மழை நின்றால் தான் பூச்சி மருந்து தெளிப்பது, உரமிடுவது, களையெடுப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →